அமேசான் 30-ம் ஆண்டு விழா... க்ளிக் செய்யுங்க, பரிசை வெல்லுங்கள்... வாட்ஸ்அப்பில் வைரலாகும் தகவல்




அமேசான் நிறுவனத்தின் 30-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இலவச பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக வாட்ஸ் அப்பில் ஒரு லிங்க் வைரலாகி வருகிறது.

ஒருத்தன ஏமாற்ற நினைச்சா அவன்கிட்ட கருணைய எதிர்பார்க்காத, அவன் ஆசைய தூண்டிவிடு என்ற சினிமா வசனத்தை போல் தான் தற்போது அதிக மோசடிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இலவசம் என்றால் அது நம்மை ஏமாற்ற தான் என்று தெரியுமால் சும்மா தானே வருது, அதை ஏன் விடுவானே என்ற மோகத்தினால் பலர் ஏமாற்றப்படுகின்றனர்.


அதில் ஒன்று தான் தற்போது வாட்ஸ் அப்பில் அதிக பேரால் பகிரப்படும் அமோசன் 30-வது ஆண்டு விழா கொண்டாட்ட இலவச பரிசு லிங்க். தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு டிசைன் டிசைனாக ஏமாற்றும் முயற்சில் இதுவும் ஒன்று. அசலை விட போலி நன்றாக இருக்கும் என்பது போல் வாட்ஸ்அப்பில் வரும் இந்த லிங்கை கிளிக் செய்தால் அமேசான் தளத்தில் இருப்பது போல் உருவாக்கி உள்ளனர்.

வாட்ஸ் அப்பில் வரும் இந்த லிங்கை கிளிக் செய்தால் வாழ்த்துகள், எங்கள் கணக்கெடுப்பில் நீங்கள் பங்குபெற்றதற்கு. அதன்பின் ஒரு நிமிடத்தில் 3 வாய்ப்பு வழங்கப்பட்டு பரிசு பெட்டி போல் இருப்பதை கிளிக் செய்ய சொல்கிறது. மூன்று வாய்ப்புகளில் ஒரு முறை நீங்கள் ஏதாவது ஒரு பரிசை வெல்லும்படி கட்டாயம் இருக்கும்.

ஹவோய் மொபைல் அல்லது 3000 ரூபாய்க்கு அதிகமான கிஃபட் கூப்பன் கிடைத்துள்ளது என்று செய்தி வந்த உடன் இதனை நீங்கள் 20 நண்பர்கள் அல்லது 5 வாட்ஸ் குழுவிற்கு அனுப்ப சொல்லி செ்யதி வரும். மேலும் நீங்கள் ஆணா, பெண்ணா உங்களது முகவரி போன்ற உங்களில் தனிப்பட்ட தரவுகளையும் வாங்கி கொள்கின்றனர்.

இதற்கு எல்லாம் மேலாக எல்லாவற்றையும் நீங்கள் முடித்துவிட்டால் 7 நாட்களுக்கு உங்கள் பரிசு வீடு தேடி வரும் என்ற செய்தி வரும். ஆனால் அந்த 7 நாள் உங்கள் வாழ்நாளில் என்றும் வராது. இப்படி ஒரு அறிவிப்பு அமோசன் தரப்பிலிருந்து எதுவும் அறிவிக்ப்படவில்லை.

இலவசத்தை பார்த்தும் ஏமாறும் சில பயனாளர்களை வைத்து சைபர் குற்றங்களில் ஈடுபடும் விஷமிகளின் வலை தான் இது. மேலும் குறிப்பிடப்பட்ட இணைப்பு Gamevip.xyz ஆகும். இது உங்கள் கணினியை ஹேக் செய்ய சைபர் கிரைமினல்கள் பயன்படுத்தும் ஒரு லிங்க என்றும் நிரூபிக்க முடியும். இருப்பினும், அதை அகற்ற அல்லது தடுக்க ஒரு பயனருக்கு எப்போதும் ஒரு தேர்வு கொடுக்கப்படுகிறது.

இதுப்போன்ற முறையற்ற மற்றும் உறுதி செய்யப்படாத லிங்கை நீங்கள் பயன்படுத்தாமல் தவிர்ப்பதே சைபர் மோசடி போன்ற குற்றங்களில் இருந்து உங்களை காப்பாற்றும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments