தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 88,947 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்காக ஒட்டுமொத்தமாக 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றுடன் 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் இணைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்துடன் 1,20,807 விவிபேட் (வாக்காளர், தான் பதிவு செய்த வாக்கினை சரிபார்க்க உதவும் இயந்திரம்) கருவிகள் இணைக்கப்பட உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் கருவி பயன்படுத்தப்படும். ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்.
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களில் 89,185 பேர் அஞ்சல் மூலம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.319.02 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிகப்படியாக சேலத்தில் 44.47 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.