வாக்காளர் சீட்டு- தமிழகம் முழுவதும் வினியோகம் தொடங்கியது




தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு வீடாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும்பணி தொடங்கி உள்ளது. இன்று 2-வது நாளாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும் பணி நடந்தது.

வாக்காளர் சீட்டு- தமிழகம் முழுவதும் வினியோகம் தொடங்கியது

தேர்தல் நடக்கும் சமயங்களில் வாக்காளர்கள் மிக எளிதாக வாக்கு அளிப்பதற்காக வாக்காளர் சீட்டு வழங்குவது வழக்கத்தில் உள்ளது.

முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தங்களது கட்சி வேட்பாளர் சின்னத்துடன் வாக்காளர் சீட்டு அச்சடித்து வீடுவீடாக வினியோகம் செய்வார்கள்.

அரசியல் கட்சிகள் வாக்காளர் சீட்டுகளை வினியோகிப்பதால், குழப்பம் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வாக்காளர்களுக்கு சீட்டு வினியோகம் செய்வதை தேர்தல் ஆணையமே மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர் ஆண் வாக்காளர்கள். 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர் பெண் வாக்காளர்கள்.

வாக்காளர்கள்

தமிழகம் முழுவதும் இவர்கள் வாக்களிப்பதற்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளை முழுமையான அளவில் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்களை எளிதில் வரவைப்பதற்கான பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு வீடாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும்பணி தொடங்கி உள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை)2-வது நாளாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும் பணி நடந்தது.

அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு உரிய அதிகாரிகள் வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த வார இறுதிக்குள் பெரும்பாலான வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டை ஒப்படைத்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments