ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வெளிநாடுகளில் பணிபுரியும் ஏராளமானோர் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் வருகை
ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு திரும்புங்கள் என்று வாட்ஸ்அப்பில் பல்வேறு கட்சியினரும் வேண்டுகோள் விடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வெளிநாடுகளில் பணிபுரியும் ஏராளமானோர் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் வருகை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டால் இரண்டு நாளுக்கு பின்னர் தான் சொந்த ஊர் வர முடியும். ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறி விட்டது. காலை டிபன் வெளி நாட்டில் சாப்பிட்டு விட்டு பகல் உணவுக்கு சொந்த ஊர் வந்து விடுகின்றனர். விமானக்கட்டணமும் கடந்த காலங்களை ஒப்பிடுகைளில் பல மடங்கு குறைவாக உள்ளது. இது வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிங்கப்பூர்,மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக தீபாவளி, பெருநாள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் திரும்புவது வழக்கம்.

ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு திரும்புங்கள் என்று வாட்ஸ்அப்பில் பல்வேறு கட்சியினரும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து வெளி நாட்டில் வேலை செய்யும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் குறைந்த நாள் விடுமுறையில் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இதே போல் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் தொழில்கள் செய்து வந்த பலர் வாக்களிக்க குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்ப ஆயத்தமாகின்றனர்.

இவர்களின் வருகை குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கத்தை விட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments