1-ந் தேதி முதல், திருச்சி விமான நிலையத்தில் விமானங்கள் இறங்குவதற்கான தடை நேரம் மாற்றம்
திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக ஓடுதளம் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியால் தற்போது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விமானங்கள் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த தடை நேரம் மாற்றி அமைக்கப்பட்டு, வருகிற 1-ந் தேதி முதல் இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை விமானங்கள் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடுதளத்தை பலப்படுத்தும் பணி தொடர இருப்பதால் இந்த நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாற்றம் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று தெரிகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments