தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்புதமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் நேற்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 84 ஆயிரத்து 094 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 874 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தில் ஏப்ரல் 30ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நீட்டிக்கப்படுகிறது.

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை.

* கொரோனா பரவலை பொறுத்து மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்ளலாம்.

* சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* கொரோனா தடுப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

கொரோனா பரிசோதனை

* கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments