பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்ட்டுள்ளது.

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க இன்றே கடைசி நாள் என்று கூறப்பட்டது. தவறினால் பயனர்களின் பான் கார்ட் முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதோடு அபராத தொகையும் செலுத்த வேண்டி உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனால் பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வருமான வரித்துறையின் வலைத்தள பக்கத்திற்கு காலையில் இருந்தே படையெடுத்தனர்.

ஒரே நேரத்தில் பலர் வலைதளத்தை அணுகியதால் அந்த பக்கம் திடீரென முடங்கியது. அதையடுத்து பயனர்கள் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டனர். தொடர்ந்து முடங்கிபோன வலைத்தளம் இயல்பு நிலைக்கு திரும்பி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31-ம் தேதியுடன் பான் - ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அவகாசத்தை நீட்டித்து வருவான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பான் - ஆதார் எண் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டித்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments