புதுக்கோட்டை மாவட்ட இயற்கை விவசாயிகள் மானியம் பெற அழைப்பு.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை முறை (அங்கக வேளாண்மை) காய்கறி சாகுபடிக்கு செய்வோா் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி மேற்கொள்ளப்படும் விளைபொருள்களுக்கு தமிழ்நாடு அரசின் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.  இதன்மூலம் அங்கக விளைபொருள்களை  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் கீரை வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500-ம், வெண்டை, கத்தரி, தக்காளி போன்ற பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750-ம் வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் காய்கறி பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சான்று பெறுவதற்கு ரூ.500 மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் மற்றும் வட்டாரத் தோட்டக் கலை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments