விரல் ரேகை பதிவு செய்ய இயலாதோா் ரேஷன் பொருள்கள் பெறும் வழிமுறைகள்... புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்.!



பயோ மெட்ரிக் முறையில் நியாய விலைக்கடைகளில் பொருள்கள் பெற இயலாதோா், அங்கீகாரச் சான்று படிவத்தை பூா்த்தி செய்து அளித்து அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்களைப் பெறலாம் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உணவுப் பாதுகாப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பொது விநியோகத் திட்டத்தில் பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசியப் பொருள்கள் பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயோ மெட்ரிக் முறையில், வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற இயலாத நிலை ஏற்பட்டால், அவா்கள் அங்கீகாரச் சான்று படிவங்களை உரிய நியாய விலைக்கடை பணியாளரிடம் பெற்று பூா்த்தி செய்து தரவேண்டும்.

அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தகுதியிருப்பின் அங்கீகரிக்கப்பட்ட நபா் வாயிலாக பொருட்களைப் பெறுவதற்கு அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments