முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி தலைமையில் மதுரை பிரெண்ட்ஸ் மஹாலில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்றும், திமுக தேர்தல் அறிக்கை குறித்து திண்ணை பிரச்சாரம் மேற்கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:-
1. எதிர்வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மக்கள் விரோத பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வாக்காளர்களிடம் தீவீர பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.
2. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து வெற்றிபெறச் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.
3. தமிழக சட்டசபை தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்ய வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் தீவீர பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
4. திமுக தேர்தல் அறிக்கை குறித்து திண்ணை பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
5. தமிழகத்தில் சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு மற்றும் 39 இஸ்லாமிய ஆயுள் தண்டனை கைதிகளையும் எவ்வித பாகுபாடும் காட்டாமல் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருவது என தீர்மானிக்கப்படுகிறது.
6. ஏராளமான உருது ஆசிரியர்களை உருவாக்கிய சென்னை தாஹிர்சாகிப் தெருவில் செயல்பட்டு வந்த உருது ஆசிரியர் பள்ளியை மீண்டும் திறந்திட வலியுறுத்துவது.
7. தமிழ்நாடு வக்பு வாரிய சொத்துக்கள் பல்லாண்டுகளாக மீளாய்வு செய்யாமல் தொடர்ந்து வருகிறது. மேலே வக்பு வாரிய நிர்வாகம் சமீபமாக ஊழல்மயமாகி வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாகவும், வக்பு வாரிய கண்காணிப்பில் உள்ள சொத்துக்களை முழுமையாக கள ஆய்வு செய்திடவும் வக்பு வாரிய மறுசீரமைப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தமிழக அரசுக்குப் பரிந்துரைகள் பெற்று அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோருகிறது.
8. மாநில சிறுபான்மை நலவாரியத்தை மனித உரிமை ஆணையத்திற்கு இணையான அதிகாரம் பெற்ற அமைப்பாக புனரமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்துவது என தீர்பானிக்கப்படுகிறது.
9. பூரண மதுவிலக்கை சமரசமின்றி அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.