முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் - தமிழக அரசு உத்தரவு


முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி புதிதாக கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் 66 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நாட்களுக்கு பின்னர் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. 

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 317 பேரும், செங்கல்பட்டில் 81 பேரும், கோவையில் 70 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் 5 ஆயிரத்து 149 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுதொடர்பாக தலைமைச்செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், 

“அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும். கடந்த 10 நாட்களாக கொரோனாவின் தாக்கம் 1.2% உயர்ந்துள்ளது. பிரசாரங்கள் மற்றும் கலாச்சார கூட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சென்னை மற்றும் கோவையில் கொரோனாவின் தாக்கம் 2 சதவீதம் உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments