அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் காலமானார்!


அதிமுக மக்களவை உறுப்பினர் முகமது ஜான் மாரடைப்பால் உயிரிழந்தார்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. மேலும் தமிழகத்தில் மிகவும் பலமான கட்சியாக உள்ள அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாஜக கட்சியை வைத்துள்ளது. அதற்காக பாஜகவிற்கு 20 தொகுதிகளை அதிமுக சார்பில் ஒதுக்கியது. மேலும் ஒரு மக்களவை சீட்டையும் ஒதுக்கியது.

மேலும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அதற்காக அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் அனைத்து பகுதிக்கும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.

மேலும் திமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டி உள்ளதாகவும் அதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். 2019ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக முகமது ஜான் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் வாலாஜாபேட்டையில் தேர்தல் பிரசாரத்திற்காக ஈடுபட வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணம் அடைந்ததாகவும் தகவல் வெளியானது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments