புதுக்கோட்டை: கொரோனா அச்சம் தேவையில்லை: விழிப்புணர்வு வாசங்களுடன் பலரையும் கவரும் ஓவியம்





   
வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டையில் நகராட்சி சார்பில் சாலையில் வரையப்பட்டுள்ள ஓவியம் பலரையும் கவர்ந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்காளர்கள் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி சார்பில் அண்ணாசிலை சாலையில் 100 சதவீதம் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம், கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும், வாக்குரிமை நமது பிறப்புரிமை அதனால் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா காட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. மேலும் ஒருவிரல் வரைந்து அதில் வாக்கு செலுத்துவதற்கு அடையாளமாக வைக்கப்படும் மை இருப்பது போல் வரைந்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது. இதே போன்று நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்ட உள்ளதாகவும் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments