திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து சட்டமன்ற தேர்தலில் ஆதரவளித்த இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகிகள்....இன்று மார்ச் 12 மதியம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர் பொதுச்செயலாளர் முஹம்மது சித்தீக் துணைத்தலைவர் முஹம்மது முனீர் துணை பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி மாநில செயலாளர்கள் அபூ பைசல் தக்வா முகைதீன் கலிமுல்லா ஆகியோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடைபெற்றது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் உள்ள மதச்சார்பற்ற கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு அளித்தனர்.

மேலும் முஸ்லிம்களின் 5 ஜீவாதார கோரிக்கை முன் நிறுத்தி திமுக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பின் உடன் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments