அமமுக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.



தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை எந்தவித முடிவும் எட்டப்படாமல் உள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘அ.ம.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை இன்று சுமுக முடிவை எட்டும்’ என்றார்.

அ.ம.மு.க. சார்பில் ஏற்கனவே 2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

அத்னப்டி சட்டசபை  தேர்தலில் போட்டியிடும் 3-வது வேட்பாளர் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 65 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் 130 பேர் கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திரபாலாஜியை எதிர்த்து அமமுக சார்பில் காளிமுத்து போட்டியிடுகிறார்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments