அய்யம்பட்டினத்தில் கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டதால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!



அய்யம்பட்டினத்தில் கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டதால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.

மணமேல்குடி அடுத்து உள்ளது அய்யம்பட்டினம். மீனவகிராமமான இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்த கால்வாயை தூர்வார வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் ரூ.4 லட்சத்தில் கால்வாய் தூர்வாரும் பணியை தனியார் அறக்கட்டளை மற்றும் கிராம மக்கள் இணைந்து தொடங்கினர். இதற்கிடையில் மணமேல்குடி தாசில்தார் அனுமதியில்லாமல் பணியை தொடங்க கூடாது என கூறி, பணியை நிறுத்தினார்.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் தங்களது ரேஷன்கார்டு, ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர். அங்கு தாசில்தார் இல்லாததால் துணை தாசில்தார் மேஜையில் வைத்து சென்றனர்.

இது குறித்து மீனவர் சித்திரவேல் கூறும்போது, இந்த கால்வாய் தூர்வாரும் பணியை தொடங்க அரசுக்கு கடந்த 10 வருடங்களாக கோரிக்கை வைத்தும் நடைபெறவில்லை. இதனால் தனியார் அறக்கட்டளை மற்றும் கிராம மக்களும் இணைந்து கால்வாய் தூர்வாரும் பணிைய தொடங்கினோம். இந்த பணி முழுமையடைந்தால் 300-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளை புயல் மற்றும் மழை காலங்களில் பாதுகாப்பாக நிறுத்த முடியும். 

இதனை அதிகாரிகள் பல காரணங்கள் கூறி தடுத்து நிறுத்துகின்றனர். உடனே கால்வாய் தூர்வாரும் பணி தொடங்க அனுமதி தராவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம். தேர்தல் நாளான 6-ந்தேதி படகுகளை சாலையில் வைத்து மறியலில் ஈடுபடுவோம் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments