தொண்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மண்மலக்கரை கிராமத்திற்கு செல்லும் விலக்கு சாலையான கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்.ஆர் பட்டினத்தில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கொடிப்பங்கு கிராமத்தைச் சேர்ந்த நாகநாதன் மகன் சரவணன்(28). மோட்டார் சைக்கிளில் வந்தார்.

தேர்தல் பறக்கும் படை டீம் லீடர் சேதுராமன் தலைமையிலான அதிகாரிகள் அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது, பெட்ரோல் டேங்க் கவரில் கருப்பு பிளாஸ்டிக் பையில் ரூ.1 லட்சத்தி 24 ஆயிரத்து 320 இருந்தது தெரியவந்தது.

அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments