மொஹாலியில் நடைபெற்ற தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்ட மாணவர்!புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுவளைவு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவருடைய மகன் இளங்கதிர். இவர் சென்னை பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையிலல் இவர் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். 

இதைத்தொடர்ந்து இளங்கதிருக்கு அவருடைய பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், பொன்னமராவதி பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments