புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 பெண்களை காணவில்லை என புகார்
 புதுக்கோட்டை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில்6 பெண்களை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருமயம் வட்டம் பி.அழகாபுரி அருகே பொன்னழகி அம்மன் நகரைச் சேர்ந்தவர் பி.சுந்தரம்(28). இவரது மனைவி பிச்சை(23). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மகன், மகளுடன் பிச்சையைக் காணவில்லை என சுந்தரம் அளித்த புகாரின் பேரில் திருமயம் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோன்று, திருவரங்குளம் அருகே தோப்புக்கொல்லையைச் சேர்ந்த என்.ராஜாமதன் மனைவி கலைச்செல்வி(23) என்பவரை காணவில்லை என அவரது கணவர் அளித்த புகாரின்பேரில், வல்லத்திராகோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோன்று, பெருங்களூரில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு கல்லூரி மாணவியைக் காணவில்லை என ஆதனக்கோட்டை போலீஸாரும், மாத்தூரில் ஒரு கல்லூரி மாணவியைக் காணவில்லை என மாத்தூர் போலீஸாரும், ஆவுடையார்கோவில் அருகே வெளியாத்தூரில் ஒரு கல்லூரி மாணவியைக் காணவில்லை என மீமிசல் போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமயம் அருகே பனங்குடியில் தங்கி இருந்த பாண்டியராஜின் மனைவி ராணி(26) என்பவரை கடந்த 2 நாட்களாக தனது 2 மகன்களுடன் காணவில்லை என பாண்டியராஜன் அளித்த புகார் குறித்து திருமயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments