கரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து, தமிழக அரசு ஏப்.10-ம் தேதியில் இருந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒருபகுதியாக, முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோரை நிறுத்தி, அந்தந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 1,192 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,38,400 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று, நேற்று 1,050 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுதவிர, சில இடங்களில் தனிமனித இடைவெளியை முறையாக பின்பற்றவில்லை என கடந்த 2 நாட்களில் 74 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.14,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2 நாட்களில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய 2,316 பேருக்கு ரூ.4,63,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில்... கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போக்குவரத்து போலீஸார் நேற்று இரு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.