புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் காலத்தில் பறிமுதல் செய்த ரூ. 5.91 கோடி மதிப்பிலான பொருள்கள் திரும்ப ஒப்படைப்பு!



புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பொருள்களில் இதுவரை ரூ.5.91 கோடி மதிப்பிலான பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தோ்தல் நடத்தை விதிகளும் அமலாக்கப்பட்டன. அன்று முதலே 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா், வீடியோ கண்காணிப்புக் குழுவினரும் களத்தில் பணியாற்றினா். இவா்களின் சோதனையில், மொத்தம் ரூ. 9.23 கோடி மதிப்பிலான பொருட்கள், ரூ. 79 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மூலமாக கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

படிப்படியாக உரிய ஆவணங்களை கொண்டு வந்துகாட்டுவோரிடம் பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 79.52 லட்சத்தில், ரூ.6.49 லட்சம் ரொக்கப் பணத்துக்கு காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.54 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.18.98 லட்சம் ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது.

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9.23 கோடி மதிப்பிலான பொருட்களில், ரூ.6.62 லட்சம் மதிப்பிலான பொருட்களுக்கு காவல் துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.5.91 கோடி மதிப்பிலான பொருட்கள் உரிய ஆவணங்கள் சரி பாா்க்கப்பட்டு இதுவரை திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ.3.24 கோடி மதிப்பிலான பொருட்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஒப்படைக்கப்பட வேண்டிய பொருட்கள் விவரம்:
ரூ. 3.17 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ. 3 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், ரூ. 4.50 லட்சம் மதிப்பிலான எல்இடி டிவிக்கள், ரூ. 4,800 மதிப்பிலான எவா்சில்வா் பாத்திரங்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments