புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியேற்றம்!



புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 100 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது.

மத்திய அரசு அலுவலகங்களில் 100 அடி உயரக் கொடிக் கம்பம் அமைத்து, தேசியக் கொடியைப் பறக்க விட வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியது. இதன்படி, புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 100 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன.

பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கொடியேற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை எளிமையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை ரயில் நிலைய மேலாளா் ஸ்டான்லி தலைமை வகித்தாா். காரைக்குடி ரயில்வே உதவி இயக்குநா் புருஷோத்தமன் கொடியேற்றி வைத்தாா். ரயில்வே பயணிகள் நலச் சங்கச் செயலா் ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபு, வழக்குரைஞா் சந்திரசேகரன் மற்றும் ரயில் நிலையப் பணியாளா்கள், ரயில்வே காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments