கறம்பக்குடியில் பள்ளி சிறுவர்கள் மரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலிநடிகர் விவேக்கின் பசுமை இயக்கத்தின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனால் நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பள்ளி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள் நேற்று மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் விவேக் சிறார் பசுமைபடை அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து மரக்கன்றுகளை நடப்போவதாக உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இதேபோல் கொத்தமங்கலம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பெரியகுளம் கண்மாயில் திரண்டு மரக்கன்றுகளை நட்டு விவேக்கின் லட்சியத் திட்டமான ஒருகோடி மரக்கன்றுகளை நடுவோம் என்று உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் கூறும்போது, விவேக்கின் உடல் அடக்கம் செய்யும் முன்பே மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டே முதல் கன்றை குளத்தில் நட்டோம். அடுத்து வீடுகளிலும் நட இருக்கிறோம் என்றனர். 

இதே போல பெரியாளூர் கிராமத்தில்உள்ள குருகுலம் பள்ளியில் சிவநேசன் தலைமையில் மாணவர்கள் இணைந்து 20 மரக்கன்றுகளை நட்டு இதே போல ஒவ்வொருவரும் மரக்கன்றுகள் நட்டால் அவரது ஆன்மா சாந்தியடையும் என்றனர். தொடர்ந்து கொத்தமங்கலத்தில் பலருக்கு சுமார் 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி வீடுகளில் வைக்கச் செய்தனர். மாலையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments