ஆவுடையார்கோவிலில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!ஆவுடையார்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பாக தீத்தொண்டு தினத்தையொட்டி தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு நிலைய அலுவலர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில் ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில் வளாகம் மற்றும் பெருநாவலூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் தீ விபத்துகளை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு துண்டுபிரசுரமும் வினியோகிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments