அறந்தாங்கி அரசு மருத்துவமனையின் கண்ணாடி உடைப்பு: கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்!அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் அவர் மருத்துவமனை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இரவில் உணவு வழங்கியபோது, உணவு வழங்கியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி அங்கு இருந்த கதவின் கண்ணாடியை உடைத்ததுடன், எதிரே வந்தவர்கள் மீது எச்சிலை துப்பி உள்ளார். 

இதைத்தொடர்ந்து இரவு பணியில் இருந்த டாக்டர் அவரிடம் பேச முற்பட்டபோது அவரையும் தாக்க முயற்சித்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மீண்டும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை வழங்க தலைமை மருத்துவர் சேகர் அந்த குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 

மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வில்லை என்றால் வீட்டிலே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments