ஆவுடையார்கோவிலில் ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாத பயணிகள் நிழற்குடை; பஸ்கள் நிற்காததால் அவலம்!ஆவுடையார்கோவிலில் ரூ.13 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டும், பஸ்கள் நிற்காததால் பயன்பாடு இன்றி உள்ளது.

ஆவுடையார்கோவிலில் யூனியன் அலுவலகம் அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழற்குடை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

யூனியன் அலுவலகம் அருகே உள்ள கடைவீதியில் எப்போதுமே கூட்டம் அதிகம் காணப்படுவதால், அங்குள்ள நெரிசலை தவிர்ப்பதற்காக தான் இந்த பஸ் நிறுத்தம் கட்டப்பட்டது. ஆனால் யூனியன் அலுவலகம் அருகில் உள்ள பயணிகள் நிழற்குடையில் பஸ்கள் நிற்காமல் கடைவீதியிலேயே நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது.

இதனால் இந்த புதிய பயணிகள் நிழற்குடை பயன்பாடு இன்றி வீணாகும் அவலநிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் நிழற்குடை அருகே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments