கொரோனா வைரஸ் காற்றின் மூலம்தான் வேகமாக பரவுகிறது என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒருவர் சுவாசிக்கும்போது, பேசும்போது, கத்தும்போது, பாடும்போது அல்லது தும்மும்போது வைரஸை காற்றின் மூலம் உள்ளிழுக்கும்போது பாதிப்படைகிறார் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலையின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்றினால் நாடு தத்தளிக்கிறது என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக தினமும்,ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்து வருகின்றனர். இந்த தொற்றுநோயைத் தடுக்க மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் நோயை கட்டுப்படுத்துவதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மருத்துவ இதழான லான்செட் ;கொரோனா வைரஸ் காற்று வழியாக வேகமாக பரவுகிறது. அதனால்தான் இந்த வைரஸுக்கு முன்னால் அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் சுகாதார வசதிகள் தோல்வியடைந்து வருகின்றன என்று கூறியுள்ளது.
சுமார் 3 நாடுகளைச் சேர்ந்த 6 வல்லுநர்கள் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டு இதனை உறுதி செய்துள்ளனர். இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 6 வல்லுநர்கள் ஒரு முழுமையான ஆய்வு செய்தனர், காற்றின் மூலம் கொரோனா வைரஸ் ஒரு நபரை வேகமாக பாதிப்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் காற்றில் பரவுவது குறித்து வலுவான ஆதாரங்கள் கிடைத்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருவர் சுவாசிக்கும்போது, பேசும்போது, கத்தும்போது, பாடும்போது அல்லது தும்மும்போது வைரஸை காற்றின் மூலம் உள்ளிழுக்கும்போது பாதிப்படைகிறார் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆகவே காற்றோட்டம் தொடர்பான நடவடிக்கையில் மிகுந்த கட்டுப்பாடு தேவை என்று அவர்கள் கூறியுள்ளனர். கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் கூட்டத்தை குறைத்தல் மற்றும் மக்கள் வீட்டிற்குள் செலவழிக்கும் நேரம், வீட்டின் உட்புறங்களில் இருக்கும்போதெல்லாம் மாஸ்க் அணிவது (6 அடி அல்லது 2 மீட்டருக்குள் இல்லாவிட்டாலும் கூட) போன்ற வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த ஆய்வைச் சரிபார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.