கொரோனா தடுப்பு நடவடிக்கை: புதுக்கோட்டையில் 2 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றம்!புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் 2 இடங்களில் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் தற்போது 114 பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மறைமலர் நகர் பகுதியில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கும், அதே பகுதியில் மற்றொரு பெண்ணிற்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பபட்டன.

மேலும் தகரத்தால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டதுடன், பிளிச்சீங் பவுடர் தெளிக்கப்பட்டன.

இதேபோல நியூ கோல்டன் நகர் பகுதியில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மொத்தம் 2 இடங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.

நகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு வீடு, வீடாக கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments