புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று அளிக்க 30-ந் தேதி கடைசி நாள்!புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீதம் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட

மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், நாட்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் மற்றும் 75 சதவீதம் அதற்குமேல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வகை மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.

மேற்காணும் இத்திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 பெற்று பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து வாழ்நாள் சான்று படிவம் பெற்று, அதில் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து கையொப்பம் பெற்று உரிய சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு 04322-223678 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

மேற்கண்ட தகவலை கலெக்டா் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments