கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளி மற்றும் தவ்ஹீத் பள்ளியில் நோன்பு கஞ்சி வினியோகம் !




கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் தொழுகை நடத்த அரசு தடை விதித்து உள்ளது. இருப்பினும் நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி வழங்க தடையில்லை.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் 
நேற்று முன்தினம்  ஏப்ரல் 26 திங்கட்கிழமை முதல்  கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளி மற்றும் தவ்ஹீத் பள்ளியில் நோன்பு கஞ்சி வினியோகம்  வினியோகம் நடைபெறுகிறது

பெரிய பள்ளி


கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளியில்
மதியம் 2 மணி முதல் நோன்பு கஞ்சி வினியோகம் நடைபெறுகிறது

தவ்ஹீத் பள்ளி


கோபாலப்பட்டிணம் தவ்ஹீத் பள்ளியில்
மாலை 4: 30  மணி  முதல் நோன்பு கஞ்சி வினியோகம் நடைபெறுகிறது

மேலும் கஞ்சி வாங்க வரும் நபர்கள் கண்டிப்பாக முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் கொரொனா தொற்றின் அறிகுறிகள் உள்ளவர்கள் கஞ்சி வாங்க வருவதை தவிற்குமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

முகக்கவசம் இனி உயிர் கவசம்

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும்போதும்,
உங்கள் வீட்டு குழந்தைகள் நலனுக்காகவும், உங்கள் குடும்பம் நலனுக்காகவும், உங்கள் ஊர் நலனுக்காகவும், உங்கள் ஊரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். 

வெளியே சென்று வீட்டிற்குள் நுழையும் முன் கைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments