ஹஜ் இல்லங்களை கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக சிகிச்சை மையங்களாக மாற்றம்
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஹஜ் கமிட்டி இல்லங்களை கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக சிகிச்சை மையங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

ஹஜ் இல்லங்களை  தற்காலிக சிகிச்சை மையங்களாக பயன்படுத்த  அந்தந்த மாநில அரசுக்கு வழங்க சிறுபான்மை விவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

குஜராத், கர்நாடகம், கேரளம், டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், மராட்டியம், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, ராஜஸ்தான், பீகார், திரிபுரா, ஜார்கண்ட்  ஆகிய மாநிலங்களில் உள்ள ஹஜ் இல்லங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments