தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்கக் கோரிக்கை
தொண்டி அருகே மணக்குடியில் இருந்து நம்புதாளை வரை சேதமடைந்துள்ள கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இச்சாலை வழியாகத்தான் பட்டுக்கோட்டை, ராமேசுவரம், வேளாங்கண்ணி, தூத்துக்குடி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. 

இச்சாலையில், தொண்டி அருகே நம்புதாளையிலிருந்து சுமாா் 10 கிலோமீட்டா் தொலைவில் உள்ள மணக்குடி வரை சாலை மோசமாக சேதமடைந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 

எனவே சம்பந்தப்பட்ட துறையினா் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments