தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

           
தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2 அலை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

* தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்

* தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி.

* 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

* பெட்ரோல்,டீசல் பங்குகளுக்கு தொடர்ந்து அனுமதி.

* இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து.

* பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.

* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிக்கையை படிக்க:


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments