லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; கொத்தனார் பலிஆதனக்கோட்டை அருகே உள்ள எம்.குளவாய்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விஜயகுமார் (வயது 20). கொத்தனாரான இவர். நேற்று பெருங்களூர் கடைவீதிக்கு வந்துவிட்டு எம்.குளவாய்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது புதுக்கோட்டையிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments