ஏப்.10 முதல் முகக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் கிடையாது - பெட்ரோலிய வணிகர் சங்கம்

10ஆம் தேதிமுதல் முகக்கவசம் அணிந்து வராவிட்டால் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திம் மீண்டும் கொரோனாபரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு மீண்டும் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அவை அனைத்தும் ஏப்ரல் 10ஆம் தேதிமுதல் பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், 10ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிந்து வராவிட்டால் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் போட வாகனங்களில் வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments