கொரோனா உயர்வு; ராஜஸ்தானில் வரும் 22ந்தேதி முதல் மே 21ந்தேதி வரை 144 தடை உத்தரவு





           
கொரோனா உயர்வை முன்னிட்டு ராஜஸ்தானில் வரும் 22ந்தேதி முதல் மே 21ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்தியாவில் முதன்முறையாக கடந்த 15ந்தேதி 2 லட்சத்திற்கு கூடுதலான கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது.  இந்த எண்ணிக்கை நாள்தோறும் நீடித்து வருகிறது.  இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா பாதிப்பு 2.73 லட்சமாக பதிவாகி உச்சம் தொட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது.

இவற்றில் ராஜஸ்தானில் 4.27 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  3.47 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  3,204 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வை முன்னிட்டு ராஜஸ்தானில் ஏப்ரல் 22ந்தேதி முதல் வருகிற மே 21ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என மாநில உள்துறை அறிவித்து உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments