தமிழ்நாட்டில் மே 2ல் முழு ஊரடங்கு இல்லை - சத்யபிரதா சாகு





தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது ஊரடங்கு விதிகள் அமலில் இருக்குமா என்பது குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தியது . இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 22ஆம் தேதியோடு முடிவடையவுள்ள நிலையில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனை இன்று மாலை முடிவடைந்த நிலையில் வரும் 20-ம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இந்த சூழலில் வரும் மே 2ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. அப்போது முழு ஊரடங்கு எப்படியிருக்கும் என்ற கேள்விகள் பரவலாக எழுந்தன. இந்நிலையில், அதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி

சத்யபிரதா சாகு விளக்கம் அளிக்கையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

1 Comments

  1. evm மில் நல்ல திருடுற வரைக்கும் திருடுங்க

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.