அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற 3 இறுதி வாய்ப்பு -அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்புஅரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற 3 இறுதி வாய்ப்பு வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த சிறப்பு வாய்ப்புகளை பயன்படுத்தி அடுத்தடுத்து வருகிற 3 செமஸ்டர் தேர்வுகளிலும் மாணவர்கள் அரியர் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் 1990-ம் ஆண்டு முதல் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்கள் மற்றும் தமிழகத்திலுள்ள பிற பொறியியல் கல்லூரிகளில் 2001-ம் ஆண்டு முதல் பயின்று அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, முதுநிலை மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments