சிட்டி பேங்க்: இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு!






சிட்டி வங்கி
இந்தியாவிலிருந்து வெளியேற இருப்பதாக சிட்டி பேங்க் அறிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வங்கியாக திகழ்ந்து வருமகிறது சிட்டி வங்கி. இது அமெரிக்காவின் 3வது பெரிய வங்கியாகவும் விளங்குகிறது. சிட்டி வங்கி விரைவில் இந்தியா, சீனா உட்பட 13 சர்வதேச சந்தைகளில் இருந்து சில்லறை வங்கி செயல்பாட்டு சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவை தவிர்த்து பிற சந்தைகளில் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ள சிட்டிகுரூப் குழுமம் சிங்கப்பூர், லண்டன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங் காங் என 4 சந்தைகளில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது. எனவே இந்தியா , சீனா, மலேசியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா, போலந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், கொரியா , தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய 13 நாடுகளில் வங்கி சேவைகளை நிறுத்தப்போவதாக சிட்டி பேங்க் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த வெளியேறும் நடவடிக்கை எப்போது நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

எங்கள் வங்கி சேவைகளை நாங்கள் நிறுத்தவில்லை, வெளியேற மட்டும் தான் செய்வோம். நடப்பு வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் உடனடியாக ஏற்படாது எனவும் இந்தியாவில் உள்ள்ள தங்கள் ஊழியர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏதும் இல்லை எனவும் சிட்டி வங்கியின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாங்கள் இப்போது இந்திய நுகர்வோர் வணிக பிரிவுக்கு வாங்குபவரைத் (buyer) தேடுவோம், மேலும் தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களையும் நாடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் 35 கிளைகளுடன் சுமார் 4000 ஊழியர்களுடன் இயங்கி வரும் சிட்டி வங்கி நுகர்வோர் வங்கி வணிகத்தில் கிரெடிட் கார்டு, சில்லறை வங்கி சேவை, வீட்டுக் கடன், நிதி மேலாண்மை போன்ற சேவைகளை அளித்து வருகிறது. இந்தியாவில் சிட்டி வங்கிக்கு 12 லட்சம் வங்கி சேவை பெறுவோர், 22 லட்சம் கிரெடிட் கார்டுதாரர்கள் 2.9 மில்லியன் அதாவது சுமார் 29 லட்சம் சில்லறை வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

சிட்டி வங்கி தற்போது வெளியேறவுள்ள நாடுகளில் பெரும்பாலானவை ஆசியாவிலும், ஒரு சில நாடுகள் ஐரோப்பாவிலும் உள்ளன. 2020ம் நிதியாண்டில் சிட்டி வங்கி 6.5 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. உலகம் முழுவதும் சிட்டி வங்கிக்கு 224 கிளைகள் உள்ளன, இவற்றில் 123.9 பில்லியன் டாலர்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ள்ளன.

சிட்டி வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த பிப்ரவரியில் பொறுப்பேற்றுக் கொண்ட ஜேன் ஃபிரேசரின் முதல் அதிரடி நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments