மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு கார் ஓட்டியதால் விபத்து 3 பேர் பலி


மடியில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காரை ஓட்டியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் தத்தநேரியைச் சேர்ந்த பசும்பொன் என்பவர் ஒரு கைக்குழந்தை உட்பட குடும்பத்தினர் 10 பேருடன் தொண்டி அருகேயுள்ள கோவிலுக்கு சாமிகும்பிட சென்றுள்ளார்.

சிவகங்கை மாவட்டம்  காளையார்கோவில் அடுத்த உலக ஊரணி என்ற இடத்தின் அருகே வந்தபோது திடீரென கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் மருத்துவமனையில் ஒருவரும் என 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

கைக்குழந்தையை மடியில் கிடத்தியவாறு பசும்பொன் காரை ஓட்ட முயன்றதாகவும் ஒரு கட்டத்தில் மடியில் இருந்து நழுவிய குழந்தையை பிடிக்க முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments