கோபாலப்பட்டிணத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகமாக வாக்களிப்பு!






புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 06/04/2021 செவ்வாய் கிழமை காலை 7.00 மணியளவில் துவங்கி மாலை 7.00 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

கோபாலப்பட்டிணத்தில் காலை 7 மணி முதலே சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆண்கள், பெண்கள் தனித் தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்..

மொத்த வாக்காளர்கள்

கோபாலப்பட்டினத்தில்   1867 ஆண் வாக்காளர்கள், 1934 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3801  வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்குப்பதிவு நிலவரம்

2021 சட்டமன்ற தேர்தலில் கோபாலப்பட்டிணத்தில்   972 ஆண் வாக்காளர்கள் (24.93%) 1273பெண் வாக்காளர்கள் (33.49%) மொத்தம் - 2245(59.06%)
வாக்களித்தனர்

4 வாக்குச்சாவடி  விபரம்

வாக்குச்சாவடி எண் 146

கோபாலப்பட்டினத்தில் வாக்குச்சாவடி எண் 146 ல்  540 ஆண் வாக்காளர்கள், 499  பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1039  வாக்காளர்கள் உள்ளனர்.

இதில்  ஆண்கள் பேர் 259(24.93%) பெண்கள்  344(33.10%) பேர் மொத்தம் 603 பேர் (58.03%) வாக்களித்தனர்

வாக்குச்சாவடி எண்  147

கோபாலப்பட்டினத்தில் வாக்குச்சாவடி எண் 147 ல்  411 ஆண் வாக்காளர்கள், 462  பெண் வாக்காளர்கள் என மொத்தம் 873  வாக்காளர்கள் உள்ளனர்.

இதில்  ஆண்கள் பேர் 216 (24.74%) பெண்கள்  290 (33.22%) பேர் மொத்தம் 506 (57.96%) வாக்களித்தனர்

வாக்குச்சாவடி எண் 148

கோபாலப்பட்டினத்தில் வாக்குச்சாவடி எண் 148 ல்  511 ஆண் வாக்காளர்கள், 518  பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1029  வாக்காளர்கள் உள்ளனர்.

இதில்  ஆண்கள் பேர் 269(26.14%) பெண்கள்  338(32.85%) பேர் மொத்தம் 607(58.99%) வாக்களித்தனர்

வாக்குச்சாவடி எண் 149

கோபாலப்பட்டினத்தில் வாக்குச்சாவடி எண் 149 ல்  405 ஆண் வாக்காளர்கள், 455  பெண் வாக்காளர்கள் என மொத்தம் 860  வாக்காளர்கள் உள்ளனர்.

இதில்  ஆண்கள் பேர் 228(26.51%) பெண்கள்  301(35.00%) பேர்
மொத்தம் 529(61.51%) வாக்களித்தனர்

கோபாலப்பட்டிணத்தில். உள்ள 4 வாக்குசாவடிகளிலும் பெண்கள் தான் அதிகமாக வாக்களித்துள்ளனர் 

மேலும் வரக்கூடிய தேர்தலில் கோபாலப்பட்டிணத்தில் 100 % வாக்குப்பதிவு  நடைபெற அனைவரும் வாக்களிப்போம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments