முழு ஊரடங்கு: 4 வழித்தடங்களில் நாளை (ஏப்ரல் 25) குறைந்த அளவில் மின்சார ரெயில் சேவை





கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மட்டுமின்றி ரெயில்வே ஊழியர்கள் பணிக்கு வருவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதனால் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மின்சார ரெயில் சேவை குறைந்த அளவில் இயக்கப்படுகிறது.

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- சூலூர்பேட்டை ஆகிய 4 வழித்தடங்களில் வழக்கமான சேவையை விட குறைவான அளவில் ரெயில்களை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

*மின்சார ரெயில்*

அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சார ரெயில்கள் ஒரு மணி நேரம், 2 மணி நேரம், 3 மணி நேர இடைவெளியில் இயக்கப்படுகிறது.

மருத்துவம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வேலைக்கு வந்து செல்வதற்காக இந்த சேவை அளிக்கப்படுகிறது.

வழக்கமாக 600 மின்சார ரெயில்கள் தினமும் இயக்கப்படும். ஆனால் நாளை மிக குறைந்த அளவிலேயே இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மட்டுமின்றி ரெயில்வே ஊழியர்கள் பணிக்கு வருவதற்காகவும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments