கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல்களில் ஐவேளை ஜமாஅத் தொழுகை மற்றும் தராவிஹ் தொழுகை ,இப்தார் ,நோன்பு கஞ்சி ,பெண்களுகான பயான் குறித்த முக்கிய அறிவிப்பு





ஏப்ரல் 25 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில்

கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல்களில் ஐவேளை ஜமாஅத் மற்றும் தராவிஹ் தொழுகை ,இப்தார் ,நோன்பு கஞ்சி ,பெண்களுகான பயான் குறித்த முக்கிய அறிவிப்பு கூறியுள்ளார்கள்

அதன் விவரம்

* கோபாலப்பட்டிணம் அனைத்து பள்ளிவாசல்களில் ஏப்ரல் 25 ஞாயிற்றுக்கிழமை ஜவேளை தொழுகைக்கு பாங்கு மட்டும் சொல்லப்படும்...

* கோபாலப்பட்டிணம் அனைத்து பள்ளிவாசல்களில்
ஜவேளை தொழுகை & தராவிஹ் தொழுகை
ஜமாஅத்தாக தொழுகை பள்ளியில் நடைபெறாது என்பதை அறிவித்து கொள்கின்றோம்..

* ஜவேளை தொழுகை & தராவீஹ் தொழுகையினை அவரவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும்.

* கோபாலப்பட்டிணத்தில் ரமலான் நோன்பு கஞ்சி பள்ளிவாசலில் தயாரித்து வினியோகிப்படமாட்டாது.

* கோபாலப்பட்டிணம் அனைத்து பள்ளிவாசல்களில்
பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி இல்லை. உணவு பொருட்களை வீட்டிலேயே தயாரித்து சுகாதாரம் அனுசரிக்க வேண்டும்.

* தினமும் பெண்களுக்கு நடக்க கூடிய பெண்கள் பயான்  முழு ஊரடங்கு காரணமாக நடைபெறாது.

மேற்கண்ட நடைமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்றி சமுதாய நலன் காத்து ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments