புதுக்கோட்டை மாவட்டத்தில் 72.94 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...
தமிழகத்தில் நேற்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் புதுக்கோட்டையில் 72.94 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

புதுக்கோட்டையில் 72.94 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-

ஆலங்குடி- 78.44%
அறந்தாங்கி - 70.37%
கந்தர்வக்கோட்டை - 75.40%
புதுக்கோட்டை - 72.94%
திருமயம் - 75.89%
விராலிமலை - 85.43%

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments