“கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது; 4 வாரங்கள் முக்கியமானவை”- மத்திய அரசு எச்சரிக்கை


கடந்த ஆண்டை விட கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த நான்கு வாரங்கள் முக்கியமானவை என்று எச்சரித்துள்ளது.

கொரோனா பரவல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதி அயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே. பால், கொரோனா பரவலின் தீவிரம் அதிகரித்துள்ளதாக கூறினர். சில மாநிலங்களில் கொரோனா பரவல் மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருந்தாலும் நாடு முழுவதுமே தொற்று அதிகரித்து வருவதை காணமுடிவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த இரண்டாம் அலையை தடுப்பதில் மக்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த நான்கு வாரங்களில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக போராட வேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

கொரோனா பரிசோதனைகளை குறைத்தது, நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கத் தவறியது, கோவிட் தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாததே பாதிப்பு அதிகரிக்க காரணம் என்றும் வி.கே. பால் குறிப்பிட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments