புதுக்கோட்டையில் குடிநீர் வசதி கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்!புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க கோரியும், குடிநீர் வசதி ஏற்படுத்த கோரியும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று நகராட்சி அலுவலகத்தின் முன்பு நேற்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் கையில் தட்டில் உணவை வைத்துக் கொண்டும், தேங்காய் சிரட்டையை வைத்துக் கொண்டும் சாப்பிட உணவுக்கு கூட குடிநீர் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் நின்றனர். பின்னர், கோரிக்கை அடங்கிய மனுவை நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியனிடம் அளித்தனர். 

அதில், 2 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் விட வேண்டும், நகராட்சி குடிநீர் லாரியை அனுப்பி குடிநீர் வினியோகிக்க வேண்டும், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments