கோபாலப்பட்டிணத்தை குளிர்வித்த கோடை மழை.!! பொதுமக்கள் மகிழ்ச்சி!!!



குமரிக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஏப்.12 முதல் ஏப்.15 வரை, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் முதலே கடும் வெயில் வாட்டி வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில்  கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்களில் பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி கிடக்கின்றனர். வெயிலின் கொடுமையால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

 இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில்  
இன்று ஏப்ரல் 12 காலை 6  மணிக்கு மேல் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. காலை 10 மணியவவில் மிதமான மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் பெய்தது. அதன்பின் மழை நின்றது. 

ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலால் அவதி அடைந்து வந்த மக்கள் இன்று பெய்த லேசான தூறல் மழையால்  குளிர்ந்த காற்று வீசியதால்  குழந்தைகள் வயதானவர்கள்  மற்றும்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.









Click: சாகுல் ஹமீது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments