ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலி கோபாலப்பட்டிணத்தில் வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்



தமிழிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும்  விதமாக கடந்த 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும்  அதே நேரத்தில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கடற்கரை நகரமான  கோபாலப்பட்டிணத்தில்  இன்று 25.04.2021 ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் காரணமாக  கோபாலப்பட்டிணம்  முக்கிய சாலைகளில் மற்றும் வீதியில்  மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

கோபாலப்பட்டிணத்தில் .இன்று முழு நேர ஊரடங்கை தொடர்ந்து   கடைகள்  திறக்கப்படவில்லை, மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை, இதனால்  , ECR சாலை, மற்றும் கடற்க்கரை வெறிச்சோடின. ஊரடங்கின் காரனமாக பள்ளிவாசலில் ஐவேளை தொழுகை , தராவிஹ்  தொழுகை மற்றும் இன்றைய இப்தார் கிடையாது என்றும் அவர் அவர் வீடுகளில் தொழுகை ,இப்தார் நிறைவேற்றிக்கொள்ளம் ,    அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கி இருந்தனர்.

புகைப்பட உதவி

சுல்தான் அப்துல் காதர்
முகமது முபராக்
முகமது மஹாதிர்
பர்சாத் கான்
உஸ்மான்
அபுதாஹிர்





































எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments