பகல் நேரத்தில் பயணம் செய்ய விரும்பினால் அதற்கேற்ப டிக்கெட் மாற்றி வழங்கப்படும். பகல் நேர பஸ்களிலும் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.
தமிழகத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரவுநேர பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே நீண்டதூரம் செல்லும் அரசு விரைவு பஸ்கள் காலையிலேயே இயக்கப்பட உள்ளன. இரவு 10 மணிக்குள் அந்தந்த இடத்தை அடையும் வகையில் அரசு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.
மேலும் இரவுநேர பஸ்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு பணம் திருப்பி வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோ கூறியதாவது:-
இரவுநேர ஊரடங்கு காரணமாக நாளை (20-ந் தேதி) முதல் இரவுநேர பஸ்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் காலையிலும், பகல் நேரத்திலும் வெளியூர் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப தேவையான அளவுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். காலை 6 மணி முதலே பஸ்கள் ஓடத்தொடங்கி விடும். வெளியூர் செல்லும் பயணிகள் ஏராளமானோர் ஏற்கனவே இரவுநேர பஸ்களுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் முன் பதிவு செய்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் பகல் நேரத்தில் பயணம் செய்ய விரும்பினால் அதற்கேற்ப டிக்கெட் மாற்றி வழங்கப்படும். பகல் நேர பஸ்களிலும் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.
ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் முக்கிய இடங்களுக்கு பகல் நேரத்தில் பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் ஆம்னி பஸ் களிலும் ஏற்கனவே முன் பதிவு செய்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்து விட்டு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் பயணம் செய்ய விரும்பினாலும் அதற்கேற்ப டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.