1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் வினியோகிக்கப்படுகிறது. இதனை வீடுகளில் வைத்து தேர்வு போல எழுத அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் திறந்து முழுமையாக செயல்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துதல், கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்புவது, வாட்ஸ்-அப் குழுக்கள், செயலி மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது. பிளஸ்-1 வகுப்பு வரை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம், இணைப்பு பாடப்பயிற்சி கட்டகம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு பாடத்திலும் கேள்விகளும், அதில் பதில்களை நிரப்ப இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் பள்ளியில் பெற்று வீட்டில் வைத்து நிரம்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம், இணைப்பு பாடப்பயிற்சி கட்டகம் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் ஆர்வமுடன் புத்தகத்தை பெற்றுச்சென்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "மாணவர்களுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும். ஆனால் தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் அறிவுத்திறன் பாதிக்காத வகையில் பயிற்சி புத்தகம் வழங்கப்பட்டு அதில் தேர்வு போல நடத்தப்படுகிறது. இதனை மாணவர்கள் வீட்டிலேயே இருந்து படித்து நிரப்பலாம். இதில் படம் வரைதல், தமிழ் உள்பட 5 பாடங்களுக்குரியவை வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்களை மதிப்பீடு செய்யப்படும்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.